Categories: Health

மிளகை எப்படி பயன்படுத்த வேண்டும்?

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றார்கள் முன்னோர்கள்.

மிளகின் வெளிப்புறக் கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே, மிளகு கலந்த உணவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும், ஆரம்பக்கட்டப் பிரச்சினையை எதிர்த்துச் செயல்படும். சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளைக்கு அரை ஸ்பூன் சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாவதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்துவர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம்புல்லையும், பத்து மிளகையும் இடித்துத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்திவந்தால், விஷக்கடிகள் முறிந்துவிடும்.

மிளகை ஒரு ஸ்பூன் எடுத்துப் பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்துச் சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

admin

Recent Posts

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…

11 hours ago

சூர்யா 46 : வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…

14 hours ago

லோகா: 25 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…

15 hours ago

விஜி சொன்ன வார்த்தை, சூர்யா எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

16 hours ago

கிஸ் : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…

19 hours ago

முத்து,மீனா சொன்ன வார்த்தை.. விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…

19 hours ago