Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கார் ரேஸில் கலக்கி வரும் அஜித்திற்கு ஆர்வம் வந்தது எப்படி? அவரே பகிர்ந்த தகவல்.!!

How did you get interested in car racing Ajith open talk.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. மீண்டும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார்.

தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வந்து தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார் இந்த நிலையில் கார் ரேசில் ஆர்வம் வந்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசி உள்ளார் அஜித்குமார். எனக்கு ஏழு எட்டு வயதில் இருந்தே தன் தந்தையின் நண்பர்களில் சிலர் இந்தியன் சாம்பியன்ஷிப் ரேசில் கலந்து கொள்வார்கள் அப்படி தான் எனக்கு அறிமுகமானது அதிகம் ஆர்வம் வந்தது என்று கூறியுள்ளார்.

அப்போது ரேஸ் ஓட்டுநர்கள் பலரும் ரேசுக்கும்போது இறந்து விடுவார்கள் அந்த பயம் எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது முன்பு ஓடுதளங்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு இல்லை ஆனால் காலம் இப்போது எல்லோரும் மாறி இருக்கிறது ஓட்டுநர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி பழைய ஓடுதள வடிவங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன தற்போது காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடுகளை அளிக்க முன் வருகின்றனர் எனவே எனக்கு அப்படியான பிரச்சனைகள் இருந்ததில்லை எனக் கூறியிருக்கிறார்.

மேலும் நான் வளர்ந்த சர்க்யூட்களில் இப்போது நான் ரேஸ் ஓட்டுகிறேன் என்பதே எனக்கு கனவு நிஜமானதை போன்று இருப்பதாக சொல்லி இருக்கிறார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

How did you get interested in car racing Ajith open talk.!
How did you get interested in car racing Ajith open talk.!