Categories: Health

வென்டிலேட்டரில் இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு!

கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது – அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.

இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்கள் மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி, 40% உடல் தசையை இழக்கிறார். வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார், அத்துடன் நுரையீரல் அல்லது இதய சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காரணத்தினால்தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.

திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும். கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள். உங்களின் உடல் வெப்பநிலையை 40° டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.

உங்கள் அன்புக்குரியவர்கள் கூட உங்களைப் பார்க்க வர முடியாது. உங்கள் இயந்திரத்துடன் ஒரு அறையில் நீங்கள் தனியாக இருப்பீர்கள்.

ஆனால் சிலர் முக கவசம் (Mask) அணிவது சங்கடமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்!

மாஸ்க் கட்டாயம் அணியுங்கள்.
நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்க…

நன்றி.
மருத்துவர் அஞ்சுகம் பூபதி.

admin

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

12 minutes ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

3 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

3 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

5 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

5 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

5 hours ago