திட்டம்- 2″ மற்றும் “அடியே” ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த படத்தை செவன் வாரியர் பிலிம்ஸ் மற்றும் வெயிலோன் எண்டர்டெயின்மென்டுடன் ஜேஜேபி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை இன்று வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்தின் பெயர் ஹாட் ஸ்பாட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் தளத்தில்,” படம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிகிறது. ஹாட் ஸ்பாட் படத்தின் பர்ஸ்ட் லுக் பகிர்வதில் மகிழ்ச்சி.
பட குழுவிற்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
This looks very intriguing ???? Happy to share the first look of #Hotspot ????❤️
Best Wishes to the entire team ????????@vikikarthick88 #KJBTalkies @veyilonent @SixerEnt @KalaiActor @iamSandy_Off @Gourayy @Ammu_Abhirami @jananihere @AadhityaBaaskar @subashselvam04 @Pro_Velu pic.twitter.com/1088n1t6V2— aishwarya rajesh (@aishu_dil) February 16, 2024

