Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியும் என்றே தெரியாது”: ஹிட்லர் படத்தின் ஹீரோயின் குறித்து பேசிய விஜய் ஆண்டனி

hitler-movie-press-meet-update viral

படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.’ஹிட்லர்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, இயக்குனர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார்.

அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கவுதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துகள். விவேக், மெர்வின் இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் இயக்குனர் முரளி அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி என்றார்.

hitler-movie-press-meet-update viral
hitler-movie-press-meet-update viral