Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ஹிட்லர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்ட படக்குழு..வைரலாகும் போஸ்டர்

hitler movie motion poster update

படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.