கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்க சில உணவுகள் இருக்கிறது.
பொதுவாகவே உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பு கண்கள். கண்களின் ஆரோக்கியத்திற்கு நாம் சில பல உணவுகளை சாப்பிடுவது வழக்கம் ஆனால் கண்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையிலும் சில உணவுகள் இருக்கிறது. அதைக் குறித்து நாம் தெளிவாக பார்க்கலாம்.
முதலில் நாம் குளிர்பானங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இதில் அதிகம் சர்க்கரை இருப்பதால் இது டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தி விடும். நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகமாக கண் பிரச்சனை வரும் என அனைவரும் அறிந்ததே.
மேலும் உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் அப்படி சேர்க்கும்போது அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது ரத்த நாளங்களை பாதித்து விழித்திரையின் கீழ் திரவம் உருவாவதால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு பார்வை இழக்க நேரிடும்.
உணவில் நாம் பாஸ்ட் மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து கண் பார்வையை பலவீனம் அடையச் செய்யும்.