Tamilstar
Health

பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

Here are super tips to remove yellow stains from teeth

பற்களில் ஏற்படும் மஞ்சள் கரையை நீக்க எளிய டிப்ஸ் பார்க்கலாம்.

பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பது பெரும்பாலும் அனைவருக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இதனால் பலர் வெளியில் செல்லும்போது சங்கடத்தை மேற்கொள்கின்றனர். அப்படி இந்த பிரச்சனையில் இருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் பார்க்கலாம் வாங்க.

முதலாவதாக நாம் செய்ய வேண்டியது தேங்காய் எண்ணெயில் பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து பிறகு பற்களை துலக்க வேண்டும்.

அப்படி தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கும்.

மேலும் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பிரஷ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மாறும்.

இது மட்டும் இல்லாமல் அண்ணாச்சி பழத்தை சிறு சிறு துண்டுகளாக மிக்சியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அந்த கரைசலை பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும்.

இறுதியாக வாழைப்பழத் தோலை கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். அப்படி தேய்த்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கி பளபளப்பாக இருக்கும்.