நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் நோயாகிவிட்டது. இதனை சில செடிகள் வைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நீரிழிவு நோய் வர முக்கிய காரணம் மன அழுத்த பிரச்சனை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை தான்.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இன்சுலின் செடி பெருமளவில் உதவுகிறது. இந்தச் செடியில் இருக்கும் இலைகளை சாப்பிட்டு வந்தால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
இது மட்டும் இல்லாமல் இரண்டாவதாக பயன்படுத்தக்கூடியது கற்றாழை. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை எடுத்து சாராக மாற்றி குடித்து வர வேண்டும். இதுவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். மேலும் கற்றாழை சருமம் மற்றும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்தது என அனைவரும் அறிந்ததே