Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2சீரியலில் பாண்டியனின் இரண்டாவது மகனுக்கு ஜோடியாக போகும் மீனா.வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஸ்டாலின் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க முதல் சீசன் தம்பிகளின் கதையாக ஒளிபரப்பான நிலையில் இந்த சீசன் மகன்களின் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் முதல் சீசனில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா சதீஷ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் இரண்டாவது மகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

முதல் சீசனில் இரண்டாவது தம்பி ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தது போல இந்த சீசனில் பாண்டியனின் இரண்டாவது மகன் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கிறார். சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் முதல் சீசனில் பிரசாந்த் வேடத்தில் நடித்துப் பிறகு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை வைத்து தங்கச்சி புருஷனுக்கு மீனா ஜோடியாகி விட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Hema Character in Pandian Stores 2 serial
Hema Character in Pandian Stores 2 serial