Help the school in Madurai - Bollywood actress Katrina Kaif appeals
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், மதுரையில் உள்ள ஒரு பள்ளி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனது தாய் மற்றும் அவரது அறக்கட்டளையால் கட்டப்பட்ட ஒரு பள்ளியை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மதுரையில் அமைந்துள்ள மவுண்டைன் வியூ என்ற பள்ளியானது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏழை குழந்தைகளுக்கு தரமான ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. தற்போது 200 குழந்தைகள் வரை இங்கு பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படிப்பதற்கான வசதி உள்ளது. மேலும் 14 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டி இருக்கிறது.
நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்து பல குழந்தைகளின் கனவை நனவாக்குவோம். தற்போது இருக்கும் கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது மிகவும் அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…