Tamilstar
Health

மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் ஆரோக்கிய உணவுகள்..

Healthy foods to fight stress

நம் மன அழுத்தத்தை குறைக்க நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது பொதுவாகவே அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை. அதை நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

மன அழுத்தத்திற்கு நாம் அதிகமாக ப்ரோபயோடின் உணவுகளை சாப்பிட வேண்டும்.

தயிர் போன்று புளிக்கக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்கிறது.இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்

ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ள பழங்களை நாம் சாப்பிடும் போது மன அழுத்தத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். மேலும் வைட்டமின் டி பொருட்களான மீன், முட்டை, கல்லீரல், மாட்டிறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

இது மட்டும் இல்லாமல் தானியங்கள் ,கொட்டை வகைகள் ,பருப்பு வகைகள் சாப்பிடுவதன் மூலம் பதட்டத்தை குறைத்து மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு மன அழுத்தத்திலிருந்து விலகி ஆரோக்யமான வாழ்க்கையை வாழ்வதே சிறந்தது.