Tamilstar
Health

குங்குமப் பூவில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

Health benefits of saffron

குங்குமப் பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாக குங்குமப்பூ பெண்களுக்கு அதிக பயன்களை கொடுக்கிறது. இதில் பொட்டாசியம் கால்சியம் வைட்டமின் ஏ மற்றும் சி புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

குங்குமப்பூ தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி முடி கருமையாக வளரும். மேலும் முகப்பருக்களை நீக்குவது மட்டுமில்லாமல் சருமத்தை பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

குங்குமப்பூ பசியை கட்டுப்படுத்துவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.

குறிப்பாக இது இதய பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து ரத்த ஓட்டத்தை சரி செய்ய பயன்படுகிறது.

எனவே ஆரோக்கியம் தரும் குங்குமம் பூவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.