காலை நேரம் நடை பயிற்சி செய்யும்போது நம் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
பொதுவாகவே மொபைல் பருமன் குறைக்க நினைப்பவர்கள் மட்டுமில்லாமல் அனைவருமே காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை விரும்புவார்கள். ஏனெனில் அப்படி நடைபயிற்சி செய்யும் போது புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம்.
நம் உடலுக்கான ஆற்றலை கொடுத்து அந்த நாளை மகிழ்ச்சியான நாளாக மாற்றி விடும்.
மேலும் மன அழுத்தம் பயம் நீங்கி உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நாம் காலையில் நடை பயிற்சி மேற்கொண்டால் கால் தசைகள் வலுப்பெற்று இருக்கும்.
இது மட்டும் இல்லாமல் காலை நடை பயிற்சி பெரியவர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே காலை நடை பயிற்சியை செய்து உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

