Tamilstar
Health

படிகாரத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..

Health benefits of alum

படிகாரத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பல நோய்களுக்கு நாம் வீட்டு வைத்தியத்தில் தீர்வு காண முடியும். அப்படி படிகாரம் வைத்து நாம் என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.

பல் வலியை போக்க தண்ணீரில் படிகாரம் கலந்து வாயை கொப்பளித்து வரவேண்டும். அப்படி செய்து வந்தால் துர்நாற்றம் நீங்கி வாய் சுத்தமாக இருக்கும். மேலும் காயப்பட்ட இடத்தில் படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவும் போது இரத்தப்போக்கு நின்று காயத்தின் மீது ஏற்படும் பாக்டீரியா தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.

இது மட்டும் இல்லாமல் முகத்திற்கு மசாஜ் செய்வதன் மூலம் முகம் சுத்தமாக சுருக்கங்கள் நீங்கி பொலிவாக இருக்கும். முடியில் இருக்கும் அழுக்குகளை சுத்தமாக நீக்க படிகார நீர் பயன்படுத்தினால் பேன்கள் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். சிறுநீர் தொற்றுகளில் இருந்து விடுபட படிகார நீர் பயன்படுகிறது.