Harish kalyaan ready for Marriage
தமிழ் சினிமாவில் பெண்களைக் கவர்ந்திருக்கும் ஹீரோக்களின் பட்டியலில் இருப்பவர் தான் ஹரிஷ் கல்யாண். இவர் 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் ஆனால் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு திரை உலகில் நுழைந்து மூன்று படங்கள் நடித்திருந்தார் ஆனால் அந்த மூன்று படங்களும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
இதனால் வருத்தமடைந்த இருந்த ஹரிஷ் கல்யாண் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து இருந்தார். இதன் மூலம் இவருக்கு பெண்களின் ரசிகர் கூட்டம் உருவாகியது. இதனைத்தொடர்ந்து படவாய்ப்புகளும் அதிக கிடைக்க ஆரம்பித்த ஹரிஷ் கல்யாண் ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டாகி இருந்தது.
அதன் பின் நடிகர் ஹரிஷ் கல்யான்,விவேக் நடிப்பில் வெளியாகி இருந்த படம் தாராள பிரபு. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்து இருந்தார். ஹிந்தி ரீமேக்கான இந்த படத்தை தமிழில் கிருஷ்ணன் மாரிமுத்து இயக்கியிருந்தார். இப்படம் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் “ஓமன பெண்ணே” என்ற படத்தில் பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் தற்போது திருமணத்திற்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் இவருக்கு விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் அதற்காக பெண் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது திருமணத்தின் பொறுப்பை பெற்றோர்களிடம் முழுமையாக ஒப்படைத்து இருக்கும் ஹரிஷ் கல்யாண் பற்றிய இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…