தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தமிழ் தெலுங்கு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
உடல் எடை கூடி குண்டான இவர் சில காலங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். ரீ என்ட்ரி கொடுத்து வரிசையாக பல படங்களில் நடித்துவரும் ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணம் தொடர்பான ஒரு சில புகைப்படம் மட்டுமே இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் இதன் முழு வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஓடிடி தளத்தில் ‘ஹன்சிகாஸ் லவ் ஷாதி ட்ராமா’ என்ற தலைப்புடன் வெளியிட உள்ளது. இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி திருமண வீடியோவின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது தொடர்ந்து ட்ரெய்லரை ஹாட் ஸ்டார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Here you go! The awaited trailer of #HansikasLoveShaadiDrama is out now!
Watch #HotstarSpecials #HansikasLoveShaadiDrama on #Disneyplushotstar from Feb 10@ihansika #SohaelKhaturiya @Avinaash_Offi #Uttam_Domale @nowme_datta @sajeed_a @ajaym7 #HansikaWedsSohael #Hansika pic.twitter.com/YBjRJw5vDW— Disney+ Hotstar Telugu (@DisneyPlusHSTel) February 7, 2023