தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க மாட்டேன் என வலிமை பட இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வலிமை படத்தை பல முறை பார்த்துவிட்டேன். ஆகவே இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் வீரம், விஸ்வாசம் போன்ற படங்களால் அஜித்திற்கு குடும்ப ரசிகர்கள் அதிகம் ஆகி உள்ளனர். அவர்களை கருத்தில் கொண்டு வலிமை திரைப்படம் குடும்பத் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் நாளை வலிமை படத்தை பார்த்து கொண்டாட தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


