தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.
வினோத் இதற்கு முன்னதாக அஜித்தை வைத்து பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார்.
அதுமட்டுமல்லாமல் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர்.
தற்போது இவர் அளித்த அரிய பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசிய தகவல்கள் வைரலாகி வருகின்றன.
அஜித் எப்போதுமே பாசிட்டிவான மனிதர் தன்னை சுற்றியும் பாசிட்டிவான எண்ணங்களே இருக்க வேண்டும் என நினைப்பவர்.
அவருடைய கவலை எல்லாம் ஒன்றே ஒன்று தான். அது ரசிகர்கள் எப்போதும் சினிமா சினிமா என இருந்து விடக் கூடாது. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பார்க்க வேண்டும். குடும்பத்தினர் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
அதற்கு பிறகு தான் சினிமா போன்றவை எல்லாம் என கூறியுள்ளார்.

