Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஓடிடி தளத்தில் ஜி.வி.பிரகாஷ் படம்

gv prakash new movie in OTT

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பேச்சிலர்’. இப்படம் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சதீஷ் செல்வகுமார் இயக்கிய இப்படத்தினை ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருந்தார். நாயகியாக திவ்யபாரதி நடித்திருந்தார்.

காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.