தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இருவரும் சட்டரீதியாக பிரிவதாக விவாகரத்தை அறிவித்திருந்தனர்.
இவர்களது இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள சார் படத்தில் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விமல் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பனங்கருக்கா என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி என இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்காக இந்த பாடல் நேற்று மாலை வெளியாகி உள்ளது.
