நாம் ஆரோக்கியமாக வாழ நிலக்கடலை பெருமளவில் உதவுகிறது.
பொதுவாகவே நிலக்கடலையில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பது அனைவரும் அறிந்ததே. இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து நிறுத்த உதவும். வேர்க்கடலையில் ஜிங்க், புரதம், இரும்புசத்து போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கிறது.
ஆண்களுக்கு உயிரணுக்களை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு நாம் 50 கிராம் வேர்கடலை சாப்பிட்டாலே போதுமானது.
பயோட்டின் உள்ள உணவுப் பொருள்களில் ஒன்று வேர்கடலை. இது ஏழைகளின் பாதம் என்றும் அழைப்பார்கள்.
பாதாமை விட நிலக்கடலையில் துத்தநாகம் அதிகமாகவே உள்ளது. வேர்க்கடலை தினமும் சாப்பிட்டு வந்தால் தசைகள், இதய பிரச்சனை, நரம்புகளுக்கு சிறந்தது.
எனவே நம் அன்றாட உணவில் நிலக்கடலையை சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.