உடல் எடையை குறைக்க பச்சை திராட்சை பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான். உடல் பருமன் வந்தாலே உடலில் பல்வேறு நோய்களும் வரக்கூடும் .உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். இது மட்டுமில்லாமல் உணவில் கட்டுப்பாட்டுடன் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே உடல் பருமனால் வரும் பல பிரச்சனையை சமாளிக்க திராட்சை பயன்படுகிறது. என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவு பார்க்கலாம்.
பச்சை திராட்சையில் இரும்பு, கால்சியம் ,பொட்டாசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
பச்சை திராட்சை சாப்பிடும் போது குறைந்த கலோரியுடன் நீண்ட நேரம் பசியின்மையை ஏற்படுத்தி தொப்பையை குறைக்க உதவும். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்த முக்கியமாக இருக்கிறது.
எனவே எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் பச்சை திராட்சை சாப்பிட்டு உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.