Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜிபி முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் ஷாக் தகவல்

gp muthu salary for 14-days in bigg boss6 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்திருந்தார். எண்ணில் அடங்க ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு முக்கிய காரணமாகவும் ஜி பி முத்து இருந்தார்.

ஆனால் அவர் தனது மகனின் உடல்நிலை குறைபாடு காரணமாக இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் வாரமே தானாக வெளியேறி விட்டதால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவருக்கு பதிலாக நடிகர் மன்சூர் அலிகான் அவர்களை உள்ளே அனுப்ப பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் 14 நாட்களுக்கு ஜிபி முத்து இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து 2,10,000 ரூபாயை சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் இந்த சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

gp muthu salary for 14-days in bigg boss6 tamil
gp muthu salary for 14-days in bigg boss6 tamil