Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்து கௌதம் மேனன். எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்

gowtham menon shared leo movie latest update

கோலிவுட் திரை உலகில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். தனித்துவமான கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் நடித்து முடித்திருக்கும் கௌதம் மேனன் சமீபத்திய பேட்டியில் லியோ படம் குறித்து பகிர்ந்திருக்கும் சுவாரசியமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், நான் லியோவை லோகேஷ் கனகராஜுக்காக மட்டுமே ஒப்பந்தம் செய்தேன். இப்படத்தில் தளபதி விஜய்க்கு பிறகு இணைந்த முதல் நபர் நான் தான், விஜய்யுடன் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறேன். அவருடனான உரையாடலும் மிகவும் நன்றாக இருந்தது. படப்பிடிப்பு தளத்திலும் கம்பர்டபலாக இருந்தேன். என அப்பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.