தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து எதற்காக சீர்திருத்த பள்ளிக்கு சென்றார் என்ற பிளாஷ்பேக் தற்போது ஒளிபரப்பாகி முடிந்தது. மனோஜ் செய்த தவறால் முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அதே நிலைமையில் இருக்கும் கிறிஸ்யும் முத்து மீனா காப்பாற்றி விடுகின்றனர்.
இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த டீம் ஒரு குட் நியூஸ் பகிர்ந்துள்ளனர்.
அதாவது இந்த சீரியல் ஒளிபரப்பாகி இதுவரை 800 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்த சீரியல் நல்ல வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் டி ஆர் பியிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.