தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நெருப்பில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை உருவாக்கிய நிலையை அடுத்த கொண்டாட்டமாக விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tomorrow, Sunday 7️⃣:0️⃣3️⃣ PM ????
— Lyca Productions (@LycaProductions) June 29, 2024

