Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் கோல்மால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

golmaal-movie-first-look poster

ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இவர்களின் காம்போ வில் வெளியாக இருக்கும் கோல்மால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இவர்களின் காம்போவில் வெளியாக இருக்கும் படத்தின் பெயர்தான் “கோல்மால்”. இதில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான “சாருலதா” என்ற ஹாரர் மூவியை இயக்கிய பொன் குமரன் இயக்கியுள்ளார்.

இவர் நடிகர் சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா படத்தின் கதை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த கோல்மால் படம் ஜாக்குவார் ஸ்டூடியோஸ் தயாரிப்பிலும் சரவணன் அவர்களின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அருள்தேவ் அவர்கள் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போட்டோ வெளியானது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போட்டோவை பார்க்கும்போது படம் முழுக்க காமெடி நிறைந்திருக்கும் என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வைரலாகி வருகிறது.