Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோட் படத்திற்கு வந்த சிக்கல்,அதிர்ச்சியில் படக்குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கோட் படத்தில் நடித்துள்ளார்.

திரிஷா நாயகியாக நடிக்க பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படத்துக்கு முடிவடைந்து தற்போது அமெரிக்காவில் டி ஏஜ் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

அதாவது படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய நடிகர்களை இளம் நடிகர்களாக காட்டுவதற்காக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட இதன் காரணமாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்தனர்.

இந்த நிலையில் இந்த டி.ஏஜ் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் பணிகள் முடிவடைய காலதாமாகும் என்று அதிர்ச்சி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணிகள் கால தாமதம் ஆனால் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Goat movie latest update viral
Goat movie latest update viral