Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 42 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்.. வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

gnanavel-raja-about-suriya-42-movie details

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் பத்து நிமிடம் ரோலக்ஸ் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

மேலும் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், ஜெய் பீம் ஞானவேல், சிறுத்தை சிவா உள்ளிட்ட இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் சூர்யா, சிவா கூட்டணி உருவாவது உறுதி. ஆனால் அந்த படத்தை தயாரிக்கப் போவது பாகுபலி போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த யூ வி கிரியேஷன் நிறுவனம் என தெரிவித்துள்ளார்.

நானும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளேன். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா இல்லை என தெரிவித்துள்ளார். சூர்யா சிவா கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஞானவேல் ராஜாவின் இந்த பேட்டி சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது.

gnanavel-raja-about-suriya-42-movie details
gnanavel-raja-about-suriya-42-movie details