Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கில்லி படத்தில் திரிஷாக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?நல்ல வேல நடிக்கல!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தி கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இருபது வருடங்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கில்லி படம் ரி ரிலீஸ் ஆகி மூன்று நாட்களில் 10 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது நான் தான் என ஷாக் கொடுத்துள்ளார் கிரண் ரத்தோட். ஆமாம் தரணி முதல் முதலில் இந்த படத்தின் கதையை கிரணிடம் தான் கூறியுள்ளார்.

அந்த காலகட்டத்தில் பிஸியாக நடித்து வந்த கிரண் இந்த படத்தின் மீது பெரிதாக ஆர்வம் காட்டாத காரணத்தினால் அது திரிஷாவுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் என்று கிரண் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் கிரண் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீங்க மிஸ் பண்ணதும் நல்லது தான். இந்த படத்துக்கு திரிஷா தான் சரியாக இருப்பார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?

Ghilli movie secret latest update
Ghilli movie secret latest update