Tamilstar
Health

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் நெய்.

Ghee that helps diabetics

நீரிழிவு நோயாளிகளுக்கு நெய் நல்லது. வாங்க பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்தான் நீரிழிவு நோய். இந்த நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம். அதிலும் பலருக்கும் நெய் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்ற கேள்விகள் இருக்கிறது அதைக் குறித்து தெளிவாக பார்ப்போம்.

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது அதனை ஜீரணிக்க நெய் பயன்படுகிறது. நெய்யில் பால்மிடிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

இது குடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமில்லாமல் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு இருப்பதால் டைப் 2 நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் நெய் சாப்பிடும் போது அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மேலும் திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதை கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது.