தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஜென்டில்மேன். ஏஆர் ரகுமான் இசையில் கேடி குஞ்சுமோன் இசையில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அதை தொடர்ந்து சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கேடி குஞ்சுமோன் தயாரிக்கும் இப்படத்தின் இசையமைப்பாளராக பாகுபலி படத்திற்கு இசையமைத்த எம்எம் கீரவாணி இசை அமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றி எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த இளம் அறிமுக நடிகை நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
