Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தில் இணையும் பிரபல இயக்குனர்.. வைரலாகும் தகவல்

gautham-menon-in-thalapathy-67

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று 500 கோடி ரூபாய் வசூலை குவித்த திரைப்படம் விக்ரம். பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் ஜப்பன் வினோத் என்ற நடிகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான். ஆனால் சில காரணங்களால் கடைசியில் இந்த படத்தில் இவரால் நடிக்க முடியாமல் போனது. இப்படியான நிலையில் தற்போது இவர் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆமாம் லோகேஷ் இயக்க உள்ள அடுத்த படமான தளபதி 67 திரைப்படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 gautham-menon-in-thalapathy-67

gautham-menon-in-thalapathy-67