Categories: Movie Reviews

கட்டா குஸ்தி திரை விமர்சனம்

கட்டா குஸ்தி கேரளாவில் பிரபலமான கட்டா குஸ்தி விளையாட்டில் சிறந்த வீராக மாற முயற்சிக்கிறார் முனிஸ்காந்த். ஆனால் இதற்கு இவருடைய உடல் ஒத்துழைக்காததால் அதனை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார். இவரின் பயற்சியையும் இவர் சென்று வரும் போட்டிகளையும் கூர்ந்து கவனித்து சிறு வயதிலிருந்து வளர்ந்து வருகிறார் ஐஷ்வர்யா லக்ஷ்மி.

அதன்பின்னர் அவரின் ஈடுபாடால் கட்டா குஸ்தியில் தேர்ந்த வீரராக மாறுகிறார். இதனிடையில் தன்னுடைய தங்கையை வம்புக்கு இழுக்கும் சில ஆண்களை நடுரோட்டில் வைத்து அடித்து துவைக்கிறார். இதனால் இவரை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகள் கட்டா குஸ்தி வீரர் என்பதால் தட்டி கழிக்கின்றனர். தன் மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து வைக்க வேண்டும் என்ற முனைப்போடு ஐஷ்வர்யா லக்ஷ்மியின் தந்தை இருக்கிறார்.

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் தனக்கு வரப்போகும் மனைவி தன்னைவிட படிப்பில் குறைந்தவளாகவும் முடி நீளமாகவும் இருக்க வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் விஷ்ணு விஷால் பெண் தேடி வருகிறார். எதிர்ப்பாராத விதமாக முனிஸ்காந்த், விஷ்ணு விஷாலை சந்திக்க, தன் அண்ணன் மகளை பொய் சொல்லி அவருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

கணவருக்கு இந்த விஷயம் தெரியாமல் வாழ்ந்து வரும் ஐஷ்வர்யா ஒரு பிரச்சனையில் தன் கணவரை கொலை செய்ய முயற்சிக்கும் வில்லனை, ஐஷ்வர்யா அடித்து தும்சம் செய்து விடுகிறார். அதன்பின்னர் உண்மை தெரியவர, மனைவியை அவரின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுகிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் குஸ்தியை கையில் எடுத்து ஒரு போட்டியில் சேருகிறார். ஐஷ்வர்யாவை வீழ்த்த, தீவிர பயிற்சி எடுத்து அந்த போட்டியில் விஷ்ணு விஷால் கலந்துக் கொள்கிறார். இறுதியில் தன் மனைவியை போட்டியில் வென்றாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கபடி வீரர், கட்டா குஸ்தி வீரர் என பல பரிணாமங்களில் வரும் விஷ்ணு விஷால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது மனைவியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிக்கும் இடங்களில் அழகான நடிப்பை கொடுத்துள்ளார். ஆக்ஷன் காமெடி என அனைத்திலும் கைத்தட்டல் பெறுகிறார். கட்டா குஸ்தி வீரராக வரும் ஐஷ்வர்யா லக்ஷ்மி அவருடைய பணியனை சிறப்பாக செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு வரும் காட்சிகளில் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார்.

முனிஸ்காந்த், கருணாஸ், காளி வெங்கட், ரெடிங் கிங்ஸ்லி என அனைவரும் அவர்களுடைய பணியை அழகாக செய்துள்ளனர். காமெடி மற்றும் பிற காட்சிகள் என அனைத்திலும் அவர் அவர் வேலையை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.

காமெடி, ஆக்ஷன், எமோஷ்னல் என அனைத்தையும் கொடுத்து ரசிகர்களை கவர நினைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு. முதல் பாதியில் முழுக்க கலகலப்பாக கொண்டு சென்று இரண்டாம் பாதியில் உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை தக்கவைத்துள்ளார். படத்தின் கதாப்பாத்திர தேர்வு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்தை மெருகேற்றியுள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. மொத்தத்தில் கட்டா குஸ்தி – வெற்றி.

jothika lakshu

Recent Posts

சூர்யாவை திருத்த நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

9 minutes ago

டாஸ்கில் கோபப்பட்ட ஆதிரை, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

1 hour ago

குறைந்த விலையில் நிறைய துணிகளை வேலவன் ஸ்டோரில் வாங்கி தீபாவளி ஷாப்பிங் செய்த எதிர்நீச்சல் ஷெரின்!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…

2 days ago

Veiyil Lyrical Video

Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…

2 days ago

God Mode Lyric Video

God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | ‪‪SaiAbhyankkar‬ |…

2 days ago

Pagal Kanavu Official Teaser

Pagal Kanavu Official Teaser | Faisal Raj | Krishnanthu | Athira Santhosh | Shakeela |…

2 days ago