Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்திற்கு ஆதரவாக ஆவேசமாக பேசிய கஞ்சா கருப்பு.. வீடியோ வைரல்

ganja-karupu about varisu movie

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாக சிக்கல்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை வாரிசு திரைப்படத்திற்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட் திரை உலகில் முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழும் நடிகர் கஞ்சா கருப்பு ஆவேசத்துடன் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசி புலி வரை இங்கு வந்திருக்கு, ஆனா எங்க தமிழ் படத்தை மட்டும் ஏன் அங்க விடமாட்டோம்னு சொல்றீங்க. மரியாதையா வாரிசு படத்தை அங்க ஓட்டுங்க அதுதான் பெருமை என கோபத்துடன் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். இவரது இந்த ஆவேசமான பேட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.