தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பெஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், நடிகர் ஷாம், யோகி பாபு என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் நடிகைகளின் குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இணைந்து நடிக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷூட்டிங்கில் இவர் கலந்து கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Ganesh Venkatraman Joined in Varisu