காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படம் வெளியாகி இதுவரை நான்கு நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 1.3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.