Categories: NewsTamil News

திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி இவர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்கள் ஏன் தெரியுமா ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட சீரியல் மகாபாரதம். ஏற்கனவே ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது ஊரடங்கு காலத்தில் வேறு புதிய சீரியல்கள் இல்லாததால் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்த சீரியல் தான் உலக அளவில் பெரிதும் பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இந்த சீரியலில் பாண்டவர்கள் முடிசூடிய பின்னர் திருதராஷ்டிரர், காந்தாரி, குந்தி ஆகியோர் எப்படி இறந்தார்கள் என்பதெல்லாம் இடம் பெறவில்லை.

இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தில் அரியணை ஏறிய பிறகு 17 வருடங்கள் ஆனதும் திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் வனவாசம் மேற்கொள்ள முடிவு செய்கின்றனர்.

உங்களது முடிவை அவர்களிடம் கூறி அவர்களிடம் சம்மதம் பெற்று காட்டை நோக்கி பயணிக்கின்றனர். இவர்களுடன் திருதராஷ்டிரருக்கு உதவியாக இருந்த சஞ்சயனும் செல்கிறார். கங்கை ஆற்றை ஒட்டியுள்ள ஒரு காட்டில் தங்களுக்கென ஒரு வீடு அமைத்து அதில் வாழ்ந்து வருகின்றனர்.

அன்றாடம் இந்த கங்கை ஆற்றில் நீராடி தங்களது மோட்சத்தை எண்ணி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் திடீரென ஒருநாள் இந்த காட்டில் காட்டு தீ கிடுகிடுவென பரவத் தொடங்குகிறது. இதனால் இவர்கள் மூவரும் தங்கள் மோட்சம் பெற இது தான் சரியான சந்தர்ப்பம் என கூறி அந்த காட்டுத்தீயில் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு மோட்சம் பெறுகின்றனர்.

இவர்கள் மூவரின் மறைவிற்குப் பிறகு சஞ்சயன் இமயமலைக்குச் சென்று அங்கு மோட்சம் பெற்று விடுகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகே பாண்டவர்களுக்கு தன்னுடைய அம்மா பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகியோர் இறந்த தகவல் தெரிய வருகிறது.

இதனையடுத்து அவர்கள் இந்த காட்டுக்கு விரைந்து சென்று அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக சடங்குகளை செய்து முடிப்பதாக சில புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

admin

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

3 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

3 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

3 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

3 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

3 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

4 days ago