Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷாருக்கானை பாராட்டி கம்பீர் போட்ட பதிவு

பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் அறிமுகமான இவர் படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து கொண்டு பாலிவுட்டில் கால்பதித்தார். 1992-ஆம் ஆண்டு ‘தீவானா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஷாருக்கான் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனது பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருந்த ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது. இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானை முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கம்பீர், “ஷாருக்கான் பாலிவுட்டிற்கு மட்டும் ராஜா அல்ல, அனைவர் மனதிலும் அவர் ராஜாதான். நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் அளவற்ற அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன். உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.