g-v-prakash-recent-interview-viral-about-sk21
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் தற்போது கேப்டன் மில்லர், தங்கலான் திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK21 திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள ஜிவி பிரகாஷ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயனின் SK21 திரைப்படம் குறித்து பகிர்ந்திருக்கும் சுவாரசியமான தகவல் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் SK21 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “SK21 திரைப்படம் காஷ்மீரில் நடைபெறும் போரை மையமாகக் கொண்ட படமாக இருக்கும். படத்தின் பின்னணி இசையில் போர் பட மூட் இருக்கும். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். என சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் படம் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார். இவரது இந்த பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…
THEEYOR KOODAM Official Trailer | New Tamil Thriller Movie 2026
Sura Sura Song (Tamil) | Nagabandham | Virat Karrna | Nabha Natesh | Abhishek Nama…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…