உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான்.அந்த உடல் பருமனை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள் குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம். அப்படி சில பல வகைகளை சாப்பிட்டு உடல் எடையை எப்படி குறைப்பது என்று பார்க்கலாம்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் இது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் கலோரிகள் குறைவாக உள்ள மாதுளம் பழத்தை சாப்பிடுவது நல்லது. மேலும் ஆப்பிள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கிவி பழத்தை உடல் எடையை குறைக்க சாப்பிடலாம்.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது அது உடல் எடை குறைக்க மிகவும் பயன்படுகிறது.
எனவே எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

