நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய் நீரிழிவு நோய்.நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம்.அப்படி நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில பழ வகைகளையும் நாம் சாப்பிடலாம்.
ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி இருப்பதால் அது மிகவும் சிறந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாவல் பழம் உதவுகிறது. மேலும் இன்சுலின் திறனை அதிகரிக்கிறது.
கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த பழமாக இருக்கிறது. இது வைட்டமின் சி, கே, தாமிரம், பாஸ்பரஸ், இரும்பு, போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
மாதுளை பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக இருக்கிறது. மேலும் பெர்ரி பழ வகைகளை சாப்பிடுவது நல்லது.
எனவே நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.