Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள்.. பலரையும் நெகிழ வைத்த புகைப்படம்

Free Food for Ajith in thalapathy Vijay Hotel

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டிகள் இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

அதேபோல் அஜித், விஜய் ரசிகர்கள் என்னதான் சமூக வலைதளங்களில் சண்டை இட்டு வந்தாலும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

தற்போது தல அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகளானதை கொண்டாடும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள் நடத்தி வரும் விலையில்லா உணவகத்தில் அஜித் பெயரில் இலவச உணவு வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.