கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வது மிகவும் ஆபத்தான ஒன்று. அப்படிப்பட்ட கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நாம் உணவில் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
தினமும் உடலில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்ப்பது கொலஸ்ட்ராலை குறைக்க மிகவும் நல்லது.
இது மட்டும் இல்லாமல் காய்கறி மற்றும் பழ வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மோர் மற்றும் அசைவ உணவுகளில் மீன் சாப்பிடலாம்.
முக்கியமாக உலர் பழங்கள் சாப்பிடுவது கெட்ட கொழுப்பை கரைக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.