இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் தற்போது ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி இதுவரை வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி திரைப்படம் 180 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படமும் 85 கோடிக்கும் மேல் வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் 83 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 67 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா என்ற திரைப்படம் 54 கோடி வசூல் செய்திருந்தது.
இந்த ஐந்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.