காலை உணவில் தவிர்க்க வேண்டிய ஐந்து உணவுகள் குறித்து பார்க்கலாம்.
காலை உணவை சரியாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் அது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். மேலும் காலையில் எழுந்ததிலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே அனைவரும் காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது தான் வழக்கம். வெறும் வயிற்றில் காபி குடிக்கும்போது செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. இது மட்டும் இல்லாமல் மைதாவால் செய்யப்பட்ட பிரட் மற்றும் ஜாம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக ஜூஸ் பாக்கெட் குடிப்பதை தவிர்த்து பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். மேலும் காலை உணவில் பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உடல் எடையை அதிகரிக்கக்கூடும்.
காலையில் தயிர் சாப்பிடும் போது உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து விடுகிறது.