எலும்புகளை பாதிக்கும் ஐந்து உணவுகள் குறித்து பார்க்கலாம்.
நம் உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று எலும்பு. இது உடலுக்கு பலத்தை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் எலும்பு பலவீனமாகும் போது அது நம் உடலுக்கு பல அவஸ்தைகளை கொடுக்கும். ஆனால் எலும்பை பாதிக்கும் சில உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது.
உணவில் உப்பு அதிகமாக சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது. ஏனெனில் இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சுவதால் எலும்புகளை பாதிக்கும்.
மேலும் உணவில் அதிகமாக இனிப்பு சேர்ப்பதை தவிர்த்தால் நல்லது இது மட்டும் இல்லாமல் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குளிர்பானங்களான சோடா குடிப்பதை தவிர்க்க வேண்டும்.மேலும் காபி அதிகமாக குடிப்பதை நிறுத்த முடியும்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.