Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாடல்கள் மூலம் மோதயுள்ள துணிவு மற்றும் வாரிசு படம்.!! வைரலாகும் தகவல்

first single song update for varisu vs thunivu movie

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக வளம் வருபவர்கள் தான் விஜய் மற்றும் அஜித். இதில் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் நடிகர் அஜித்தும் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது இப்படங்களுக்கான இறுதி கட்டப்பட பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு படங்களும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேராக மோத இருக்கின்றது. அந்த மோதல் தற்போது பாடல் வெளியீட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது, தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கும் நிலையில், இதே வாரத்தில் தல அஜித்தின் துணிவு படத்தின் முதல் பாடலையும் வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

first single song update for varisu vs thunivu movie
first single song update for varisu vs thunivu movie