தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இன்னும் சில மணி நேரங்களில் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தை பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் பிரபலம் ஒருவர்.
நடிகரும் தயாரிப்பாளருமான ஜே எஸ் கே சதீஷ் என்பவர் எனக்கு கிடைத்த தகவலின்படி வலிமை பக்கா என்டர்டைன்மென்ட். அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது உற்சாகம் அடைய செய்யும் என கூறியுள்ளார். வலிமை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவருடைய இந்த பதிவு இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.


